undefined

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்....!!

 

 தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்வேறு இயக்ககங்களின் தலைமை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம்  சென்னையில் நடத்தப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   "டெட் ஆசிரியர்கள் சங்கத்தினருடனான பேச்சுவார்த்தை கடும் தோல்வியில் முடிவடைந்தது.    2012-13 தொடங்கி தற்போது தேர்வாகியுள்ளவர்கள் வரை, அனைவருக்கும் ஏற்ற   வழிவகைகள் இருக்கும்படி ஒரு நல்ல நடவடிக்கை விரைவில்  எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.  

ஆசிரியர்கள் அவர்களது வருகைப் பதிவு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை மட்டும் செயலியில் தினமும் அப்டேட் செய்தாலே போதும்   பொதுத்தேர்வு குறித்து மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை பொறுத்தே இந்த முடிவுகளும் எடுக்கப்படும். பெரும்பாலும்  ஏப்ரல்  முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிளஸ் 2 பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, செய்முறைத் தேர்வு முடிந்து, சிறு இடைவெளிக்குப் பின்னர் பொதுத் தேர்வை தொடங்கப்படும்.  


ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்.   டிசம்பர் மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை முடிக்கப்படவேண்டும்.    பொதுத் தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான், மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். எனவே, தீபாவளி முடிந்த பின்னர் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு கட்டாயம் வெளியாகும்" எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!