undefined

 அரசுப்பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவி பலி... பெரும் சோகம்!

 
 

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் மேலஇழுப்புர் பகுதியில் வசித்து வருபவர்  ராஜா. இவரது மகள் அஸ்வினி. இவர், திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு  படித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி தனது சித்தப்பா மகன் அவினாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கூட்டி சென்றுள்ளார்.


 
இந்நிலையில் குருக்கத்தி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது நாகர்கோவிலில் இருந்து வேளாங்கன்னி சென்ற அரசு விரைவு பேருந்து இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இருசக்கர வாகனம் அரசு பேருந்துக்கு அடியில் சிக்கியது. 

இந்த விபத்தினால் அஸ்வினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தம்பி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அவரது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகை - திருவாரூர் கிழக்கு கடற்கரை சாலை நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை என 2 இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 


 தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!