undefined

 அதிர்ச்சி... காங்கோவில் சிறை உடைப்பு முயற்சியில் 129 பேர் கொல்லப்பட்டனர்... 59 பேர் படுகாயம்!

 
 

காங்கோ ஜனநாயகக் குடியரசு அரசாங்கத்தின் கூற்றுப்படி, தலைநகர் கின்ஷாசாவில் மத்திய மக்காலா சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சிறை உடைப்பு முயற்சியில் 59 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.DR காங்கோ உள்துறை அமைச்சர் ஷபானி கூறுகையில் 24 ரவுண்ட் துப்பாக்கி சூட்டில் இந்த 129 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மத்திய மக்காலா சிறையிலிருந்து நேற்று தப்பிச் செல்ல முயன்ற 129 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இன்று இது குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட உள்துறை அமைச்சர் ஷபானி, தனது ட்விட்டர் பக்கத்தில்,  "எச்சரிக்கைக்குப் பிறகு, மற்றவர் சலசலப்பு அல்லது மூச்சுத் திணறல் மூலம் உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளார். சிறையின் நிர்வாகக் கட்டிடம், அதன் உணவுக் கிடங்குகள் மற்றும் ஒரு மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 59 பேர் காயமடைந்தனர்.

மேலும் வெளியான ஒரு வீடியோ அறிக்கையில், "மகாலா மத்திய சிறையில் வெகுஜன தப்பிக்கும் முயற்சியில் உயிர் இழப்பு மற்றும் குறிப்பிடத்தக்க பொருள் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் வெளியிட்டுள்ள அறிக்கையானது சிறைச்சாலை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, எந்த கைதிகளும் தப்பிச் செல்வதில் வெற்றிபெறவில்லை என்றும் தப்பிக்க முயன்றவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.  வெளியில் பலத்த துப்பாக்கிச் சூடு மற்றும் கைதிகளின் சத்தம் கேட்டதாக கைதிகள் கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.