தமிழக மீனவர்கள் 12 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் `12 பேர் பருத்தித்துறை வடகிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் சென்ற போது, அங்கு ரோந்துப் பணிக்காக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிலம்பு செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சென்றதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடி. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!