undefined

பகீர்...  11000 மாணவர்கள் நீட் தேர்வில் ”ஜீரோ ”மதிப்பெண்கள்!

 

 
 
இந்தியாவில் மருத்துவ படிப்புக்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. 2024ல் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி உச்சநீதிமன்றம் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என அறிவித்திருந்தது.

அதன்படி தேசிய தேர்வு முகமையானது நீட் தேர்வு முடிவுகளை தற்போது  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 557 நகரங்களில்   மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் மொத்தம் 4750 மையங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வினை எழுதியிருந்தனர்.தற்போது முடிவுகள் வெளியான நிலையில்             11, 000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவான மைனஸ் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

என்பது தெரிய வந்துள்ளது. இதில் 2250க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறாத நிலையில், 9,400க்கும் அதிகமான மாணவர்கள் மைனஸ் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் பீஹார் மாநிலத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் மைனஸ்-180 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  இதுதான் நீட் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!