பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாப பலி.. பேக்கரி உரிமையாளர் மீது பாய்ந்தது எப்.ஐ.ஆர்!

 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது மாணவி மான்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக் வாங்கியுள்ளார். இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். மான்வியின் தாத்தா ஹர்பன் லால் கூறுகையில், இரவு 10 மணியளவில் கேக் சாப்பிட்ட அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மான்வியின் தம்பிகள் வாந்தி எடுத்தனர். மான்வி தனது தொண்டை வறண்டு விட்டது என்று கூறி தண்ணீர் கேட்கிறாள். பிறகு சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். மறுநாள் அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கில் விஷம் கலந்திருந்ததாகவும், அதுதான் மரணத்திற்கு காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பேக்கரி உரிமையாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். மான்வியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், கேக்கின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆய்வு அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்