சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம்...  மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... !

 

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அமைக்க 2023-24ம் ஆண் டுக்கு 2 ஆயிரத்து 50 எக்டேர் மற்றும் நிதி தில் ரூ.14.92 கோடி இலக்கு பதிவு பெறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரை யிலும், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன் பெறலாம். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருந்தால் இப்போது மீண்டும் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.

இத்திட் டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு, ஆதார் நகல், நில வரைப்படம், பாஸ் போர்ட் அளவு போட்டோ 3 மற்றும் தாசில்தாரிடமி ருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை \n http://tnhorticulture.tn.gov.in \n என்ற இணையதளத்தில் பதிவேற்றம்  செய்து கொள்ள வேண்டும்  இத்தகவலை கலெக் டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க