undefined

உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட 10,000 வட கொரியா வீரர்கள் ரஷ்யா வருகை!

 

உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவில் இருந்து 10,000 வீரர்கள் ரஷியாவுக்கு வருகை தந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வல்லரசு நாடான ரஷ்யாவின் அண்டை நாடாக உக்ரைன் உள்ளது. இந்தநிலையில் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக உக்ரைன் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நோட்டோ நாடுகளில் ஆதரவோடு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. இரு தரப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் போரின் தீவிரம் குறையாமல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உக்ரைன் அருகே உள்ள ரஷ்யாவின் எல்லை மாகாணமான குர்ஸ்க், உக்ரைன் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. தரைவழி தாக்குதலுக்கு மூலோபாய மையமாக கருதப்படும் குர்ஸ்க் மாகாணத்தை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. மேலும் குர்ஸ்க் மாகாணத்தை மீட்கும் முயற்சியில் ரஷ்யா ராணுவத்தின் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது. இதனால் ரஷ்யா ராணுவத்தினர் எதிர்க்கால ராணுவ திட்டங்களை முன்னிறுத்த முடியாமல் தடுமாறின.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வழங்கி உள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!