19 வயசுல ரூ1000 கோடி சொத்து..!! கலக்கும் ஜெப்டோ நிறுவனர்!!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்   கைவல்யா வோஹ்ரா .   அவரது நண்பர் ஆதித் பாலிச்சா இருவரும் இணைந்து Zepto நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம்  மளிகைப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது.  2022ல் இந்தியாவின் இளம் செல்வந்தர்கள் பட்டியலில்   ரூ.1000 கோடி சொத்து மதிப்புடன் கைவல்யா வோஹ்ராவும் இடம் பெற்றிருந்தார்.

இவரது நண்பரும் Zepto நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித் பாலிச்சாவின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடி  . 2021ல் மும்பையில்   நண்பர்கள் இருவரும் சேர்ந்து Zepto நிறுவனத்தை நிறுவினர். 2022ல்  YC Continuity Fund என்ற நிறுவனம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதனையடுத்து உடனடியாக   Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து விட்டது.

 2021 டிசம்பரில்   Zepto நிறுவனத்தின் சந்தை மதிப்பு 570 மில்லியன் டாலர்  .  ஐக்கிய அமீரகத்தில்  துபாயில் தங்கியிருந்த சமயத்தில்  கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வேலைக்காக  பதிவு செய்தனர்.இருவரும் கலந்து ஆலோசித்து  தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு மும்பை திரும்ப முடிவு செய்தனர். இந்தியா திரும்பியதும் இருவரும் சேர்ந்து Zepto நிறுவனத்தை நிறுவினர். இந்த நிறுவனம் தற்போது டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு மற்றும் மும்பை  நகரங்களில் சேவையை வழங்கி வருவதில் முண்ணனியில் இருந்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை