undefined

குடிப்பழக்கம் இல்லாமல் 100 நாள்... வைரலாகும் வாழ்த்து பேனர்!

 

 தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் பேனர்கள், ப்ளக்ஸ்கள் தான். குழந்தைகள் பிறந்த நாள், கல்யாணம், காதுகுத்து, சடங்கு,  கருமாதி, நினைவு நாள் வரை இறப்பு வரை பேனர்கள் , வாழ்த்து ப்ளக்ஸ் தான்.  ஆனால் ஒருவர் வித்தியாசமாக தான் 100 நாள் குடியை மறந்து இருந்ததாகவும் அந்த 100 நாட்களில் மட்டும் ரூ80000 கடனை அடைத்ததாகவும் பேனர் அடித்துள்ளார்.  பூந்தமல்லியில் வசித்து வருபவர் சிவக்குமார்.

இவர் பூந்தமல்லி அரசுப் பள்ளி அருகே கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் பூந்தமல்லி பகுதியில் தனது புகைப்படத்துடன் பேனர் ஒன்றை  வைத்துள்ளார். இந்த பேனரை அந்த பக்கம் போவோர் வருவோரெல்லாம் திரும்பி பார்க்காமல் செல்வதில்லை.  அந்த பேனரில்  “வெற்றிகரமாக நூறாவது நாளாக நான் மது அருந்தவில்லை. எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.  இதுகுறித்து சிவக்குமார் “நான் நூறாவது நாள் குடிக்காமல் இருக்கிறேன். குடியை நிறுத்துவதில் எனக்கும் எனது நண்பருக்கும் போட்டி. இந்த போட்டியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்.

அதனை கொண்டாடும் வகையிலும் என் மூலமாக குடிமகன்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேனர் வைத்துள்ளேன். 
மேலும் 100 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் நான் அந்த காசை சேமித்து இதுவரை ரூ.80000 கடனை அடைத்து விட்டேன். உடலும் நல்ல நிலையில் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் மது குடித்துக் கொண்டிருந்ததால்  100 நாட்கள் குடிக்காமல் இருந்ததால் அவருக்கு அவரே பேனர் வைத்தது பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேனரை பார்த்ததும் அவரது நண்பர்கள் அவரது கடைக்கு வந்து அவரை வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்