ஹஜ்  யாத்திரையில் 10 தமிழர்கள் பலி... பெரும் சோகம்!

 
 


 

இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்வில் 5 கடமைகள் மிக மிக முக்கியமானவை. இதில் குறிப்பாக புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற சவுதி அரேபியாவில்  மெக்கா நகருக்கு, உலகம் முழுவதும் இருந்து  செல்கின்றனர். தமிழகத்தில்  இருந்து  மே  25ம் தேதி முதல் கட்ட பயணிகளுடன் ஹஜ் விமானம் புறப்பட்டுச் சென்றது. தமிழகத்திலிருந்து 5,801 பேர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தனர். ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு முதல் குழு நேற்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.


326 பேருடன் வந்த விமானத்தில் இருந்த பயணிகளை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்எல்ஏ, ஹஜ் கமிட்டி செயலாளர் எம்.ஏ.சித்திக் ஆகியோர் வரவேற்றனர்.இது குறித்து  அமைச்சர் செஞ்சி மஸ்தான், ”புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ25000  மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஹஜ் பயணத்தில்  வெயிலின் தாக்கத்தால் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பி உள்ளார்” எனக் கூறியுள்ளார்.  “மெக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் வழியில் நடந்த பேருந்து விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் இழப்பை தவிர்க்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.” எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!