undefined

 க்ரீன் கார்டுக்காக காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களுக்கு செக்... !

 

 அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப்  வெற்றி பெற்றுள்ளார். 2 வது முறையாக அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ட்ரம்பின் வயது 78. இவர்  அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
 
இந்நிலையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் தானியங்கி குடியுரிமையை பெற குறைந்தபட்சம் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்.  டிரம்ப் பொறுப்பேற்ற பின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.  
 
அமெரிக்க  அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில்   குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவதே.  டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றபின் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உலகமே பெரும் எதிர்பார்பில் காத்திருக்கிறது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!