undefined

குட் நியூஸ்...  மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை...  தமிழக அரசு அசத்தல் !  

 


 
தமிழக அரசு கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைக்கவும்  அவர்களை ஊக்குவிக்கவும்  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் படி 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ2000மும் , 6 முதல்8ம் வகுப்பு வரை ரூ6000மும் , 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ8000மும் , பட்டப் படிப்புக்கு 12000மும், முதுகலை பட்டத்திற்கு ரூ14000மும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.


இதனை விரிவுபடுத்தும் வகையில் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு முதல்  பிஎச்டி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ 1,00,000  வீதம், 50 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு ரூ 50 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்பட உள்ளது என மாற்றத்திறனாளிகளின் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!