undefined

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

 

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்று நமக்காக தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது நாள் வரை கஷ்டங்களையும், சங்கடங்களையும் அனுபவித்த வந்த இந்த 6 ராசிகாரர்களுக்கும் இனி அதிர்ஷ்ட மழை தான். அதே சமயம், இந்த அதிர்ஷ்டம் சமயோசிதத்துடன் கூடிய அதிர்ஷ்டமாக வாய்த்திருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் மேலே வாழ்க்கையில் உயரலாம். உங்களை சங்கடங்களில் இருந்து சந்தோஷத்தை அள்ளித்தர அதிர்ஷ்ட தேவதை கைத்தூக்கி விட களமிறங்கி இருக்கிறது. அதிர்ஷ்ட தேவதை கைத்தூக்கி விட கை நீட்டும் போது, பிடித்துக் கொள்ளுங்க.

அதிர்ஷ்டத்திற்கு  பின் தலை வழுக்கை என்பார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? அதிர்ட தேவதைக்கு பின்னால் தலைமுடி இல்லாமல் வழுக்கையாக இருக்கும். அதிர்ஷ்டத்தைப் பார்த்தவுடன் பிடித்துக் கொள்ள வேண்டும். வரும் அதிர்ஷ்டத்தைக் காத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொஞ்சம் தயங்கினால் கூட, அது கடந்து செல்லும் போது நம்மால் பிடிக்க முடியாது. அப்படி இந்த 6 ராசிகாரர்கள் தங்களது அதிர்ஷ்டத்தை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தை மாதப் பிறப்பு உங்களுக்கு கல்வி, வேலை, திருமணம், குழந்தை, செல்வம், சுகபோக வாழ்க்கை, சங்கடங்களில் இருந்து நிவர்த்தி என ஒவ்வொருவரின் தேவையும் மாறுபடுகிறது. மேல்படிப்பு, பணி இவைகளுக்காக வெளிநாடு செல்வதும் பலரது விருப்பம். 12 ராசிக்காரர்களில் இந்த புது வருஷம் குறிப்பிட்ட  ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள். இதில் கில்லியாக சொல்லி அடிக்கப்போகும் ராசி யார் என பார்க்கலாம். 

துலாம்: 

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுக்கவே கொண்டாட்டம் தான்.  இந்த வருடத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு சுப பலன்களை வாரி வழங்க தயாராக இருக்கிறார். தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். பணியில் பதவி உயர்வு, பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். மந்தநிலை மறைந்து   நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே இந்த தை மாதம் மட்டுமல்லாமல் புது வருஷம் முழுக்கவே உங்களுக்கு பொற்காலம் தான். தொழிலில் தாறுமாறான லாபம் கிட்டும். பணம் பல வழிகளில் வந்து சேரும். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.  எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். இழுபறியில் இருந்த பல விஷயங்கள் சுபபலன்களை அள்ளித் தரும். உற்சாகம் பெருகும். 

தனுசு: 
தனுசு ராசி நேயர்களே இந்த வருடத்திற்குள் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. சோதனைகளை கடந்து வந்த நீங்கள் சாதனைகளுக்கு சொந்தக்காரராகப் போகிறீர்கள். பணியிடத்தில் சவால் இருந்த போதிலும் குருபார்வையால்  எதையும் சமாளிக்கும் வல்லமை கிட்டு.  அதிகமாக உழைக்க தயாரானால் விரைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம். வெளிநாட்டு யோகம் கிட்டும். 

 மகரம்: 

மகர ராசிகாரர்களுக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. உங்களது ராசியில் குரு மிக அற்புதமான பலன்களை அள்ளித் தரப்போகிறார். லட்சுமி கடாட்சம், அரசாங்க உதவி, தொழில் மாற்றம் நிகழப் போகிறது.  பணியிடத்தில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் உழைக்க பதவி உயர்வு பெறலாம். குரு பெயர்ச்சிக்குப் பிறகு பல வாய்ப்புக்கள் தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வரும்.  

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களே... புத்தாண்டு யோக பலன்களை அள்ளித் தரப்போகிறது. பணிச்சுமை, பணி இடமாற்றம், சவால்கள் இருந்தபோதிலும் சமாளித்து  வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கேட்டவை எல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்கள் ஆதரவால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். 

மீனம்: 

மீன ராசிக்காரர்களே பிறக்கப் போகும்  புத்தாண்டில்  மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப் போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப் போகிறது. இதனால் பணியிடத்தில்  நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் பெறப்போகிறீர்கள்.   வெளிநாட்டு யோகம் பெறுவர்.  ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்ற போதிலும் சமாளித்து மீண்டு விடுவீர்கள். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!