undefined

தீபங்களின் ஒளியில்... திரு கார்த்திகை மாதம்...  வழிபாடுகளும்... பலன்களும்!

 

தீபங்களின் ஒளியில் திரு கார்த்திகை மாதம் ஒளிரத் துவங்கியுள்ளது. இன்று கார்த்திகை  மாத பிறப்பையொட்டி, அதிகாலையிலேயே குளித்து முடித்து ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிய குவிந்தனர் பக்தர்கள். இன்னொரு புறம் சஷ்டியையொட்டி, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆன்மிகத்தோட ஆன்ம பலத்தையும் தருகிற கார்த்திகை மாதத்திற்கு எத்தனை சிறப்புகள் தெரியுமா?

அதனால தான் கார்த்திகை மாதத்தை புண்ணிய மாதம் என்று அழைக்கிறார்கள். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. கார்த்திகை மாதத்தில் தான் கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் கார்காலம் துவங்குகிறது. காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.  கார்த்திகை மாதத்தில் தினமும் சூரிய உதயத்தில் நீராடி கடவுளை வழிபடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடையலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

இந்த மாதத்தில்  விஷ்ணுவை துளசியால் அர்ச்சிப்பவர்கள் அசுவமேதயாகம் செய்த பலனை அடைவர்.  மது, மாமிசம் ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவர்.  முருகனுக்கு உகந்த நட்சத்திரங்கள் விசாகம் , கார்த்திகை.   கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவதால் வாழ்வில் மேன்மை அடையலாம். கார்த்திகை  மாத பௌர்ணமியில்  பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருவதால் பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிப்பதால் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைக்கிறோம். கார்த்திகை பௌர்ணமியில் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும்  திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதால் அந்த நாளில் நாமும் மலை வலம் வருவது கூடுதல் சிறப்பு. 


 கார்த்திகையில் சோமவாரங்களில் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். இந்த நாட்களில் நாம் செய்யும் தானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு வந்து சேர்க்கும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி அடையலாம்.

இந்த மாதத்தில் ஆலய சுத்தம் செய்தால் மன அமைதி கிட்டும். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்தால்  குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்கின்றன  நமது புராணங்கள். கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும்.இதனால் தான் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு  கார்த்திகை மாதத்தில் விரதம் இருப்பர். இந்த மாதத்தில் தான் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய  நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!