”ஹிஜாப் அணிய மாட்டேன்...” அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பெண் சிறையில் உண்ணாவிரதம்!

 

ஈரானில் ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கைது செய்யப்பட்ட நோபல் பரிசு பெற்ற பெண், தற்போது சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஈரான் நாட்டை சேர்ந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ் முகமதி (51) என்பவர், ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதயம் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நர்கஸ் முகமதி, தனக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்றும், கடுமையான ஹிஜாப் சட்ட விதிகளுக்கு எதிராகவும் சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நோபல் பரிசு பெற்ற நர்கேஸ், சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறைக்குள் நோயுற்ற கைதிகளுக்கு மருத்துவ உதவியை மறுத்தல் மற்றும் ஈரான் அரசுக்கு எதிரான கட்டாய ஹிஜாப் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது. நர்கஸ் முகமதியின் இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளது என்றும், அவர் நுரையீரல் அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!