undefined

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்... வெளியானது சூப்பர் அறிவிப்பு!

 

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், நடைமுறைக்கு வந்து, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமும் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த திட்டத்தில், மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும், தங்களது விண்ணப்பங்களின் மீதான மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே சமயம், பிற காரணங்களுக்காக விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வு வர இருக்கும் நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்கள் முன்னதாக இத்திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மேலும் அதிக பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுடைய பெரும்பான்மையான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!