undefined

சென்னை - எழும்பூர் - விழுப்புரம் ... இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

தினமும் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் கல்வி மற்றும் அலுவலகத்திற்காக லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்கள் மூலம் பயணிக்கின்றனர். இந்நிலையில் இன்று பராமரிப்பு பணிக்காக சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல்  பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை, செங்கல்பட்டு- கடற்கரை,காஞ்சீபுரம்- கடற்கரை, திருமால்பூர்- கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, காலை 10.40, காலை 10.50, காலை 11 மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11.30, காலை 11.40, காலை11.50, பிற்பகல்12, பிற்பகல்12.10, பிற்பகல்12.20, பிற்பகல்12.30, பிற்பகல்12.50, பிற்பகல்1, பிற்பகல்1.15, பிற்பகல்1.30, பிற்பகல்1.45, பிற்பகல்2, பிற்பகல்2.15, மதி2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05, காலை 10.15, காலை 10.25, காலை 10.45, காலை 10.55, காலை 11.25, காலை 11.35, பிற்பகல்12, பிற்பகல்12.15, பிற்பகல்12.45, பிற்பகல்1.30 மணி, பிற்பகல்1.45, பிற்பகல்2.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.  

அதே போல, செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40, காலை 10.55, காலை 11.30, பிற்பகல்12, பிற்பகல்1 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும்,காலை 9.30 மணிக்கு காஞ்சீபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் ரயிலும், திருமால்பூர்- கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பிற்பகல் 11.55, பிற்பகல் 12.45, பிற்பகல் 1.25, பிற்பகல் 1.45 பிற்பகல் 2.20, பிற்பகல் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பிற்பகல்12, பிற்பகல்1 மணி ஆகிய நேரங்களிலும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!