undefined

செம ! இனி தபால் அலுவலகத்திலேயே வீட்டுக்கடன் பெற்று கொள்ளலாம்! அதிரடி அறிவிப்பு!

 


இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அஞ்சல் நிலையங்கள் அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் பல்வேறு நிதிச் சேவைகளையும் வழங்கி வருகின்றன. சேமிப்பு, டெபாசிட், சிறு சேமிப்புத் திட்டங்கள், வருமான வரித் தாக்கல் என பல்வேறு நிதிச் சேவைகளை தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன.


அதில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஈசியாக வீட்டுக் கடன் வழங்க எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கூட்டணி அமைத்துள்ளது . இதன் மூலம் கிராமப்புறங்களிலும் உள்ள மக்கள் தபால் அலுவலகங்கள் வாயிலாக வீட்டுக் கடனை பெற்றுக் கொள்ள முடியும்.


இத்திட்டத்திற்காக எச்டிஎஃப்சி நிறுவனமும், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4.7 கோடி இந்தியர்களுக்கு வீட்டுக் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.