undefined

தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்... மின் விளக்குகள் அலங்கரித்த 5 வயது சிறுவன் மரணம்!

 

நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் நிலையில், தீபாவளிக்காக வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 வயது சிறுவன் அலங்கார மின் விளக்குகளில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தீபாவளிக்கு ஒன்றுக்கூடிய உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

டெல்லி முகுந்த்பூரில் உள்ள ராதா விஹா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தீபாவளியை முன்னிட்டு இவரின் வீட்டு உரிமையாளர் சர்ஜூர் ஷா, தனது வீட்டின் மேற்கூரையில் அலங்கார மின் விளக்குகளை பொருத்தியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சாகர், அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளை தொட்டு விளையாடிய போது கடுமையாக மின்சாரம் தாக்கியது.

சிறுவன் சாகரின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக சாகரை மீட்டு முகுந்த்பூர் அருகே உள்ள ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள் சிறுவன் சாகரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து இரவு 10:30 மணிக்கு ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு இரவு 10:38 மணியளவில் சிறுவன் சாகர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!