undefined

அதிகாரத்தை பிறப்புரிமையாக நினைச்சவங்க கடந்த 10 வருஷமா அதிகாரத்தில் இல்லை - பிரதமர் மோடி!

 

அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது;- "மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒரே லட்சியம். அவர்கள் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை நிராகரித்து, அரசியலமைப்பை சீர்குலைத்தனர். அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக கருதுபவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இல்லை.

அரசியல் கட்சிகளிடையே கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசியலின் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. ஜனநாயக நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்ப்புகள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் இப்போது எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதம் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டது. மக்கள் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளதால், பொய்களையும், வதந்திகளையும் பரப்பி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை முறியடித்து, பொய்களை அம்பலப்படுத்த நாட்டை நேசிப்பவர்களும், அரசியலமைப்பை மதிப்பவர்களும் அதிக விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!