undefined

நெகிழ்ச்சி வீடியோ... பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மகனுக்கு ஐ-போன் 16 கிப்ட் தந்த குப்பை சேகரிக்கும் தந்தை!

 

பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதலிடம் பிடித்த மகனுக்கு குப்பைகளை சேகரித்து ஜீவனம் நடத்தும் ஏழை தந்தை, ஐபோன் 16 வாங்கி, பரிசளித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐபோன் போன்ற விலை உயர்ந்த செல்போன்களை தனது மகனுக்கு பரிசளிப்பதற்காக வாங்கிய இவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் குப்பை அள்ளுபவர் அந்த ஐபோனை வாங்க உழைத்த சேமிப்பை பற்றியோ, அவர் சம்பாதித்ததை பற்றியோ வாய் திறக்கவில்லை. ஆனால் அவரது மாத வருமானம், வங்கி இருப்பு குறித்து பலரும் கேள்வி கேட்கின்றனர்.

“குப்பை சேகரிப்பாளர் தனது மகனுக்கு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றதற்காக ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான ஐபோனை பரிசளித்தார்" என்று வீடியோவை முதலில் பகிர்ந்தவர் குறிப்பிட்டுள்ளார். பலரும் இந்த வீடியோவுக்கு பதிலளித்து, “பொதுத் தேர்வில் தனது மகன் முதலிடம் பிடித்தபோது அடைந்த மகிழ்ச்சியின் அளவு ஐபோன் விலையை விட அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!