அடுத்தடுத்து அதிர்ச்சி... அதே ஜூன் 2ம் தேதி மீண்டும் ரயில் விபத்து... தொடரும் சோகம்!
அந்த அறிக்கையில் தவறான வயரிங், கேபிள் இணைப்பால் தவறான சிக்னல் கிடைத்தது. இதுவே ரயில் விபத்து ஏற்பட காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவுதான் விபத்துக்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்த விசாரணையை சிபிஐ தனியாக மேற்கொண்டது. அதன்படி ரயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார்மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதே போல் இந்த வருடமும் ஜூன் 2ம் தேதி மற்றுமொரு விபத்து நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மற்றொரு ரயில் பின்னால் நிறுத்தியதில் 2 லோகோ பைலட்டுகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 லோகோ பைலட்டுகள் ஸ்ரீ ஃபதேகர் சாஹிப் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் உத்திரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு விபத்தை நினைத்தாலும் இன்றும் மனதில் எழும் அச்சம் எழும். இந்நிலையில் அதே நாளில் நடந்த இந்த விபத்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்னால் இருந்து மோதியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!