undefined

கள்ளக்காதலியை திருமணம் செய்ய உசுரோட இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு.. அதிர வைத்த கணவர்!

 

கள்ளக்காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் மனைவிக்கு, மனைவி இறந்து விட்டார் எனக் கூறி 13ம் நாள் காரியம் செய்ய வேண்டும் என்று நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து நம்ப வைத்திருக்கிறார் கொடூர கணவர் ஒருவர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சாராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் படேல். இவருக்கு ஏற்கனவே பூஜா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பவன் பட்டேல் தனது மனைவியை விட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் மட்டும் வசித்து வந்தார். பவன் வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு, காதலியை திருமணம் செய்வதற்காக மனைவியுடன்  அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து, பவன் மனைவி பூனா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கான்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அதே சமயம் பவன் படேல் தனது மனைவி இறந்து விட்டதாக கூறி அவருக்கு ஈமச்சடங்கு செய்துள்ளார். மேலும், காதலியை திருமணம் செய்து கொண்டு மனைவியின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன்னுடன் வைத்திருந்தார். இது குறித்து பவன் பட்டேலின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக கூறி சடங்குகள் செய்து தனது மரணத்தை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும், தனது குழந்தைகளை கடத்திச் சென்று, தன்னை அனாதை ஆக்கி விட்டதாகவும் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன், எங்களுடன் வசிக்க வேறு ஒரு பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கேட்கவில்லை. அதனால், இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டில் வசிக்க சென்றேன். ஆனால் என் கணவர்  நான் இறந்துவிட்டேன் என்று கூறி 13வது நாள் காரியத்திற்காக ஏற்பாடு செய்தார்.

என் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சடங்குகள் செய்தார். அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை என்னுடைய ஈமசடங்குகள் காரியம் செய்ய வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். இந்த நிகழ்வை தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். எனது மரணம் குறித்து எனது உறவினர்களிடம் தெரிவித்த பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். எனது குழந்தைகளையும் கடத்திச் சென்றுள்ளார் என புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!