undefined

தமிழகத்தில் நவம்பர் மாசத்தில 13 நாட்கள் விடுமுறை... வங்கி பணிகள திட்டமிட்டுக்கோங்க!

 
நவம்பரில் பொதுத்துறை வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உங்கள்  மாநிலத்தில் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு ஏற்ப விடுமுறை நாட்களைத் தெரிஞ்சுக்கோங்க. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நாடு முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. வங்கி பணிபுரியும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த தகவலை ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்கிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி  நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் தீபாவளி, சாத் பண்டிகை உட்பட மொத்தம் 13 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் அடிப்படையில் இந்த விடுமுறை நாட்கள்  வேறுபடும். 


அதே நேரத்தில் விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தாலும்  வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை ஆன்லைனில் தொடர்ந்து பெறலாம்.   தென் மாநிலங்களில் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடும் நிலையில் வட மாநிலங்களில் நவம்பர் 1ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2024ம் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியல் :

நவம்பர் 1:  வெள்ளிக்கிழமை தீபாவளி  விடுமுறை 
நவம்பர் 2:  சனிக்கிழமை  தீபாவளி (பாலி பிரதிபதா)
நவம்பர் 3:  ஞாயிற்றுக்கிழமை 
நவம்பர் 7: வியாழக்கிழமை சாத் பண்டிகை 
நவம்பர் 8: வெள்ளிக்கிழமை  சாத் பண்டிகை 
நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை


நவம்பர் 10: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 12:  செவ்வாய்க்கிழமை எகாஸ்-பாக்வால்
நவம்பர் 15: வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி
நவம்பர் 17: ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 18: திங்கட்கிழமை கனகதாச ஜெயந்தி
நவம்பர் 23: 4வது சனிக்கிழமை
நவம்பர் 24: ஞாயிற்றுக்கிழமை

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!