undefined

பல், நகத்துக்காக 2 புலிகள் விஷம் வைத்து கொலை.. வடமாநில இளைஞர்கள் கைது!

 

புலி பல் மற்றும் நகங்களை எடுப்பதற்காக காட்டுப்பன்றியை விஷம் வைத்துக் கொலைச் செய்து 2 புலிகளுக்கு உணவாக கொடுத்து கொலைச் செய்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 20ம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் அருகில் ஒரு பன்றியும் இறந்து கிடந்தது. இதையடுத்து இறந்த 2 புலிகள் மற்றும் ஒரு பன்றியை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். புலியைக் கொல்வதற்காக காட்டுப்பன்றியின் உடலில் விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அதை சாப்பிட்ட புலிகள் இறந்ததாகவும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

வி

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின்படி வனச்சரகர் ரவி தலைமையில் வனத்துறையினர் 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் புலிகள் இறந்து கிடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூர்யநாத் பராக் (35), அமன் கோயாலா (24), சுரேஷ் நன்வார் (25) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் கைப்பற்றப்பட்டதுடன், நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீட்கப்பட்டன. அதில் இறந்த காட்டுப்பன்றிகளின் படங்கள் இருந்தன. அப்போது இறந்த பன்றியின் மீது விஷம் ஊற்றி புலிகளை கொன்றதாக 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.

புலிகளின் தோல், பற்கள் மற்றும் நகங்களுக்காக கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். புலி இறந்த விவகாரத்தில், விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை நான்கு நாட்களில் கைது செய்த வனத்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா