அதிர்ச்சி... 5ம் வகுப்பு மாணவிக்கு எலும்புமுறிவு... வெறித்தனமாக அடித்த ஆசிரியர்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தின் மொடேக் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் வெறித்தனமாக அடித்ததில், மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ராம்கஞ்ச் மண்டி சட்டமன்றப் பகுதியில் உள்ள சுல்மி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது பள்ளிக் கல்வி அமைச்சர் மதன் திலாவரின் கவனத்திற்கு இந்தச் சம்பவத்தை மாணவியின் பெற்றோர் கொண்டுச் சென்றனர்.
இது குறித்து விசாரணை நடத்தவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் முகாமில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உடனடியாக உத்தரவிட்டார். மேலும் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணையைத் தொடங்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது, கிராம சர்பஞ்ச் (தலைவர்) நடந்த சம்பவம் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தார். அமைச்சர் சிறுமியை முகாமுக்கு வரவழைத்து சம்பவம் முழுவதையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மான்வி (10). டெலியா கெடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, வகுப்பு ஆசிரியர் அப்துல் அஜீஸ் தன்னை ஒரு பாயை சுருட்டி சரி செய்யும்படி கூறினார். அறிவுறுத்தப்பட்டபடி பாயை சரிசெய்ததாக மாணவி கூறினார்.
ஆனால் ஆசிரியர் உடனடியாக கோபமடைந்து, அவர் சொல்வதைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி, கையில் இருந்த பிரம்மால் தாக்கியதால் மாணவியின் ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிராம சர்பஞ்ச் அபித் கான், கல்வி அமைச்சரை சந்திக்க சிறுமியை சுல்மியில் உள்ள முகாமுக்கு அழைத்து வந்தார். அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு எதிராக முகாமிலேயே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!