undefined

ரெண்டு குழந்தைகளையும் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்!

 

அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகமாகி தொடர்ந்து பிரச்சனைகள் காரணமாக தனது 2 குழந்தைகளையும் பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மம்தா. இவரது கணவர் சுனில் குமார். இந்த தம்பதிக்கு ஷம்பு, ஷியா என 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சுனில் குமாருக்கும், மம்தாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மம்தா கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை மம்தாவுக்கும், சுனில்குமாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்ற மம்தா தனது குழந்தைகளை கொடூரமாக கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவரும் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உயிருக்கு போராடிய மம்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த மம்தாவிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!