இதெல்லாம் காரணமா? குழந்தையை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை!

 

இதெல்லாம் காரணமா? என்று கேட்கிறார்கள் அந்த பகுதி மக்கள். படிக்க வைக்க முடியவில்லை என்பதற்காக குழந்தையை கிணற்றுக்குள் தள்ளி, தாயும் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டம் நிலங்கா தாலுகா மாலேகானில் வசித்து வருபவர் 26 வயது  பாக்யஸ்ரீ. இவருக்கு ஒரு மகன், மகள் என 2  குழந்தைகள். இவரது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பாக்யஸ்ரீ ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.


இந்நிலையில், தனது மகனையும், மகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பி உள்ளார். ஆனால், சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதற்காக கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் காரணமாக பாக்யஸ்ரீ அடிக்கடி மனஉளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு பாக்யஸ்ரீயின் தாயார் இறந்தால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.  

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு  தனது மகளுடன் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்ற பாக்யஸ்ரீ, அங்கிருந்து தனது கணவர் வெங்கட் ஹல்சேவுக்கு வீடியோ கால் செய்து, மகள் சமிக்சாவின் முகத்தை கடைசியாக பார்க்குமாறு கூறினார். அதன் பிறகு   சிறுமியை கிணற்றில் தள்ளி அவரும் குதித்தார்.

தகவல் அறிந்த ஆரத் ஷஹாஜானி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் பாக்யஸ்ரீ, சமிக்சா  இருவரின் சடலங்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, பாக்யஸ்ரீ தனது மற்றொரு ஆண் குழந்தையையும் தன்னுடன் கிணற்றுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். அந்த குழந்தை தவறி விழுந்து தப்பிச் சென்றதால் உயிர் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!