undefined

அந்தரங்க வீடியோ காட்டி பலாத்காரம்.. அக்ரீமெண்ட் போட்டு கர்ப்பமாக்கிய கொடூரம்!

 
அக்ரீமெண்ட் போட்டு பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. இதில் உல்லாச வீடியோவைக் காட்டி மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததும் அம்பலமாகி இருக்கிறது. மும்பையில் வசித்து வரும் 29 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும், 46 வயதுடைய நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இவர்களது பழக்கம் நெருக்கமான நிலையில், இருவரும் லிவ்-இன்-டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். அப்போது அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. இதனால், அந்த பெண் தனது உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார்.

இது குறித்து பிரச்சனை செய்ததும் தான் அந்த ஆணின் சுயரூபம் தெரிந்தது. இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவைக் காட்டி, தன்னுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். அதேபோல வீடியோக்களை பலமுறை காட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்படுவதை தவிர்க்க அந்த நபர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் 11 மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை, பெண் ஒன்றாக வாழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவைத் தொடர ஒப்புக்கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களின் ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா