undefined

பெரும் சோகம்... அடுத்த 10 நாட்களில் கல்யாணம்... இளம்பெண் முகத்தில் ஆசிட் வீச்சு!

 

சமீபமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்த்து, திருமண தேதி எல்லாம் நிச்சயம் செய்து, பத்திரிக்கை அடித்து ஊர் முழுக்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண பத்திரிக்கையை கொடுத்து மகிழ்ந்தனர் அந்த குடும்பத்தினர். திருமணத்திற்கு இன்னும் 10, 15 நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் முகத்தைக் குறிவைத்து, ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பெண்ணின் முகம் ஆசிட் வீசப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், கல்யாண கனவுகளுடன் எல்லாம் கைகூடி வரும் நிலையில் காத்திருந்தாள் அந்த இளம்பெண். இந்நிலையில், தனது வீட்டினருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது தாயாருடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, முகத்தை மறைத்துக் கொண்டு இவர்களுக்கு குறுக்கே வந்த 2 இளைஞர்கள், இவர்களிடம் வழிகேட்பது போல நடித்து பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களின் நோக்கத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் தயார், மகளுடன் அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றிருக்கிறார்.

அப்போது இளைஞர்களில் ஒருவன், இளம்பெண் முகத்தை குறிவைத்து கைவசமிருந்த அமிலத்தால் தாக்கியதுடன், இளைஞர்கள் இருவருமாக அங்கிருந்து ஓடி மறைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மகளை  மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் அவரது தாயார் சேர்த்தார். ஆனால் அமில வீச்சின் பாதிப்பு அதிகமிருப்பதாகக் கூறி கோரக்பூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளம்பெண் உயிருக்கு ஆபத்து இல்லாதபோதும், அமில வீச்சினால் முகம் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமில வீச்சுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் விரைந்து  வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் . சம்பவ இடத்தின் சுமார் 20க்கும் மேலான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அமில வீச்சு குற்றத்தினை நிகழ்த்திய இளைஞர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளனர்.

அந்த இளைஞர்கள் திட்டமிட்டு தங்களது முகத்தினை மறைந்துக்கொண்டு நடமாடி இருப்பதால், சம்பவ இடத்தில் செயல்பாட்டில் இருந்த அலைபேசி எண்களை ஆராய்ந்து குற்றவாளிகளை வளைக்க முயன்று வருகின்றனர். மேலும், இளம்பெண்ணின் முன்னாள் காதலர்கள் எவரேனும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரித்தனர். இந்நிலையில் ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்ற இளைஞர்களில் ஒருவரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!