undefined

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

 

 
தறிகெட்டு ஓடிய கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஹ்தர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுல்தான் என்பவர் காரை ஓட்டி வந்தார். காரில் சுல்தானின் மனைவி குலாப்ஷா (28 வயது), மகள்கள் அனடியா (8 வயது), அலிசா (6 வயது), மகன் ஷாத் (5 வயது), சுல்தானின் சகோதரி சந்த் பானோ (35 வயது), அவரது மகள் அதிபா (14 வயது) ஆகியோர் இருந்தனர்.

சாலையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவர் சுல்தான் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், கார் சாலையை விட்டு விலகி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுல்தானின் மனைவி, 2 மகள்கள், சுல்தானின் சகோதரி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சுல்தான், அவரது மகன் மற்றும் மருமகள் - ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!