undefined

ஒரே நேரத்தில் 2 பேருடன் டேட்டிங்.. இளைஞர் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்!

 

ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் டேட்டிங் செய்து வருவதைக் கண்டு இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் சித்து (27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி தொழிலதிபர் ஹிதேந்திர குமார் (58) இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு அந்த பெண்ணை நேரில் சந்திக்க தொழிலதிபர் விரும்பினார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் மறுநாள் பூங்காவில் சந்தித்தனர். இதையறிந்த பெண்ணின் காதலன் பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சித்து, குமாரை தாக்க முயன்றார். முதலில் குமாரின் கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் குத்த முயன்றார், ஆனால் அது தடுத்து காப்பற்றப்பட்டார்.

பின்னர் அவர் வயிற்றில் கத்தியால் குத்தினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணையும், சித்துவையும் கைது செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!