பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 6 பேர் பலி; 18 பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலம் ஷஹாபூர் கிராமத்திற்கு அருகே ஜல்னா-வாடிகோத்ரி நேற்று MH20BL 3573 என்ற எண் கொண்ட பேருந்தும், டிரக்கும் மோதிக் கொண்டதில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு குழந்தை உட்பட 25 பயணிகளுடன் ஜியோராயில் இருந்து ஜல்னா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, MH01CR8099 என்ற எண் கொண்ட டிரக் ஒன்று அம்பாட்டில் இருந்து ஆரஞ்சு பழங்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த டிரக்கின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் அம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து மீட்டனர். கோண்டி மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் இருந்து போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணிகளுக்கு உதவியதோடு காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!