வாடகை தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த 54 வயது நபர்.. விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!
தெலுங்கானா மாநிலம் ராயதுர்கம் மை ஹோம் பூஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஷ் பாபு (54). இவருக்கு குழந்தை இல்லை. எனவே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக சந்தீப் என்ற புரோக்கர் மூலம் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சிங், அஷ்விதா (25) தம்பதியை சந்தித்தார். அவர்களிடம் ராஜேஷ் பாபுவுக்கு செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்று தருவதற்கு ரூ.10 லட்சம் கிடைக்கும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி இருவரும் தங்களது 4 வயது மகனுடன் கடந்த அக்டோபர் 24ம் தேதி ஹைதராபாத் வந்தனர். அப்போது, 9வது மாடியில் உள்ள ராஜேஷ் பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பில் அஷ்விதாவையும், 7வது மாடியில் உள்ள வீட்டில் அவரது கணவர் சஞ்சய் சிங்கும் தங்கவைக்கப்பட்டனர். செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற தேவையான அனுமதிகளை பெறும் பணி நடந்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக அஸ்விதாவுக்கு ராஜேஷ் பாபு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கு அஷ்விதா செயற்கையாக தான் குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்றும் உடலுறவுக்கு சம்மதிக்க மாட்டேன் என்று ராஜேஷ் பாபுவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கணவரிடம் கூறியுள்ளார். ஆனால்,கணவரிடம் ஒடிசாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு இரண்டு மூன்று முறை கூறியும், குழந்தை பிறந்தால், பணக் கஷ்டம் தீர்ந்துவிடும் என, மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார் சஞ்சய் சிங்.
இருப்பினும் ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கிருந்து தப்பித்து கணவர் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு செல்ல அஷ்விதா முடிவு செய்தார். இதற்காக ராஜேஷ் பாபுவின் 9வது மாடி பிளாட்டின் பால்கனியில் இருந்து சேலை கட்டி அதன் வழியாக இரண்டு தளங்கள் இறங்கி 7வது மாடியில் உள்ள கணவரின் பிளாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இரண்டு சேலைகளை ஒன்றாக கட்டி 9வது மாடியின் பால்கனியில் தொங்கவிட்டு அந்த புடவைகளை பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயன்றார். அப்போது கைகள் நழுவி அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராயதுர்கம் போலீசார் அஸ்விதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!