13000 பறவைகள் பலி!! தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல்!! உஷார் மக்களே!!

 

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து இன்னும் முழுவதுமாக விடுபடாத நிலையில் ஒமைக்ரான் பீதி உருவாகியுள்ளது.இன்னும் அச்சத்தை உருவாக்கும் வகையில் தற்போது கேரளாவின் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழாவில் வாத்து, கோழிகள் வளர்ப்பு அதிகம்.


கடந்த சில நாட்களாகவே இப்பறவைகளுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் அடுத்தடுத்து சுமார் 13000க்கும் அதிகமான வாத்துக்கள் உயிரிழந்தன.இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் நேரடி ஆய்வு நடத்தினர்.உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் பறவை காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஆலப்புழாவை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் செல்வும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.நீர் நிலைகளுக்கு வரும் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.