undefined

ராம்ராஜ் முத்திரையை தவறாக பயன்படுத்திய போலி மாஸ்க் தயாரிப்பு நிறுவனர் அதிரடி கைது!

 


உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து அன்றாட உடைகளுடன் முகக்கவசம் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்வதில் பல முண்ணனி நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளன. அந்த வகையி திருப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் அளிக்கப்பட்டது.


இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக்கவசங்களை தயார் செய்து விற்பனை செய்வதற்கு சட்டப்படி காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அங்கீகாரம் பெற்று விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வேறு ஒரு நிறுவனம் தரமற்ற முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.


இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில், பூந்தமல்லியைச் சேர்ந்த ஆண்ட்ரியா டிசைனர்ஸ் மற்றும் ஆர் கிளாத்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான கருணாநிதி, அவரது மனைவி அன்பரசி ஆகியோர் போலி முகக்கவசங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கந்தகுமார் தலைமையில் சென்ற போலீஸார், அங்கிருந்த போலி முகக்கவசங்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதுடன் நிறுவன உரிமையாளர் கருணாநிதியை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.