undefined

பெரும் சோகம்... நீட் தேர்வால் மாணவி தற்கொலை! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

 

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மாணவியின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் திரண்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள இரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. விவசாயியான இவரது மகள் பைரவி (18). பைரவி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.  அதன் பின்னர், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை பைரவி எழுதியிருந்தார். நீட் தேர்வில் பைரவி குறைந்தளவிலான மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சியடையாததால், பைரவியை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

பெற்றோர் திட்டியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த வாரம், தனது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை பைரவி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மருந்து குடித்ததை தனது பெற்றோரிடம் கூறாமல், கடுமையான வயிற்று வலி என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், பைரவியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் சேர்த்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பைரவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறியழுதனர். 

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையொட்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புக்கு கூடுதல் போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!