கள்ளக்காதலியுடன் உல்லாசம்... மனைவிக்கு வாட்ஸ்-அப் ல வீடியோ அனுப்பிய கணவன்!
மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுப்பவிப்பதை வாட்ஸ்-அப்பில் வீடியோவாக மனைவிக்கு அனுப்பி வைத்த கணவனின் செய்கையால், தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்த துட்டம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெய்சங்கர்-சாந்தி தம்பதி. இவர்களுக்கு 19 மற்றும் 17 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.ஜெய்சங்கர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக பெங்களூருவில் உள்ள மற்றொரு பெண்ணுடன் ஜெய்சங்கர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த சாந்தி, கணவரை கண்டித்துள்ளார். அதை பொருட்படுத்தாமல் ஜெய்சங்கர் அந்த பெண்ணுடன் தொடர்ந்து உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சாந்தி, தனது இரண்டாவது மகனுடன் சேலம் பைப்பூர் கிராமத்தில் உள்ள தந்தை கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்தார். மனைவி பிரிந்ததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், தனது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சாந்திக்கு அனுப்பி, 'என்னை இப்படி சந்தோஷப்படுத்த முடியாது' என வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தி, கணவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சாந்தியின் தந்தை கோவிந்தராஜ் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகளின் சாவுக்கு மருமகன் ஜெய்சங்கரும், அவரது கள்ளக் காதலியும் தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சாந்தியின் கணவர் ஜெய்சங்கர் மீது மனைவி தற்கொலைக்கு தூண்டியதாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெய்சங்கர் மற்றும் அவரது கள்ளக் காதலியின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!