undefined

சூப்பர் ஆபர்! காவல்துறையில் சேர விரும்பும் இளைஞர்களே உங்களுக்கான வாய்ப்பு!

 


இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களின் கனவாகவும், ஆர்வமாக இருந்து வருவது ராணுவம், போலீஸ் போன்ற பணிகளில் சேர்வது தான். இந்த பணியில் சேர பலபேர் தேர்வின் ஆரம்ப கட்டத்தில் விண்ணப்பிப்பது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து எழுத்துத்தேர்வு நடைபெறும். அதன்பிறகு உடல்தகுதி தேர்வு நடத்தப்படும்.

இந்நிலையில் மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல்தகுதி தேர்வை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இம்மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
போதிய பயிற்சி இல்லாததால் பலருக்கும் போலீஸ் பணி கனவாகி விடுகின்றது. இதை தவிர்க்க காவல்துறையினரே சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். இன்று முதல் வரும் 23 வரை உடல்தகுதி தேர்வுக்காக பயிற்சி அளிக்க உள்ளனர்.


ஓட்டப்பயிற்சி, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவசமாக காவல்துறையினரே வழங்க இருக்கின்றனர்.மதுரையில் மாவட்ட ஆயுதப்படை மைதானம், அரசு ஆண்கள் பள்ளி மேலூர், பி.கே.என். ஆண்கள் பள்ளி திருமங்கலம், அரசு ஆண்கள் பள்ளி உசிலம்பட்டி, விவேகானந்தா கல்லூர் திருவேடகம், காந்திஜி அரசு பள்ளி பேரையூர் ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெறுகிறது.