undefined

பிரபல ஹோட்டல் பிரியாணியில் கோழியின் முழு தலை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!

 

கேரளா ஸ்டைல் பிரியாணி, மலப்புரம் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மொகல் பிரியாணி, தம் பிரியாணி, மூங்கில் பிரியாணி என இந்தியர்களின்... குறிப்பாக தென்னிந்தியர்களின் உணவுகளில் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது பிரியாணி. குறிப்பாக கடந்த 10 வருடங்களில் அனைத்து நகரங்களிலுமே பாஸ்ட் புட் கலாச்சாரம் பெரு வரும் நிலையில், நள்ளிரவு, அதிகாலை, மதியம் என்று நேரம் காலங்கள் பார்க்காமல் பிரியாணியை ஒரு பிடி பிடிக்கிறார்கள் பொதுமக்கள். அதே சமயம், சமீபமாய் அசைவ உணவகங்கள்... சிறிது, பெரிது, பிரபலமானது, கையேந்திபவன், பிளாட்பார கடைகள் என்று வித்தியாசம் பார்க்காமல் உணவை விஷமாக பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் உடல் நலன் மட்டுமல்லாமல், உயிரைப் பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை.

கேரளாவில் இது கொஞ்சம் அதிகம். ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளம்பெண், பரோட்டா சாப்பிட்டு பலியான மாணவி என்று பார்சலில் கோழி தலை முழுவதுமாக அப்படியே இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர் அண்மையில் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கி உள்ளார். அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்து பார்த்துள்ளார். அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்திருக்கிறது.

அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினார்கள்.


பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்ததால் எர்ணாகுளத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டலில் நீங்களும் கரப்பான் பூச்சி, ஈ, வண்டு என எதையாவது பார்த்திருப்பீர்கள். அதைபற்றியும், ஓட்டல் ஓனர்கள் அதற்கு அளித்த பதில் பற்றியும் உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!