undefined

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா? 

 
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளும், பெருமைகளும் இருக்கா? என்று ஆச்சர்யப்படுகின்ற அளவுக்கு வழிபாடுகளும், பலன்களைத் தரும் வல்லமையும் கொண்ட மாதமாக இருக்கிறது புரட்டாசி மாதம். புரட்டாசி என்றதுமே நம் அனைவருக்கும், முதலில் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் வழிபாடு தான். அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. நம் பாவங்களை களைந்து புண்ணியங்களை  இரட்டிப்பாக்கி தர வல்லது.

எனவே, பெருமாள் பக்தர்கள் ,புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா நாளுமே சிறப்பு வாய்ந்தவை தான். சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுவதும் இந்து மதத்தின் கோட்பாடே. இந்த மாதத்தில் அம்பிகை  நவராத்திரி 9 நாட்கள் சிறப்பாக நடத்தப்படும். அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகிய விரதங்களும் சிறப்பு வாய்ந்தவையே. 

புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம். கடவுள் வழிபாடுகள் மட்டுமின்றி  முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும், புரட்டாசி மாதத்தில் தான் அனுசரிக்கப்படுகிறது. மறந்தவர்களுக்கு மகாளயம் என்பது முதுமொழி அதற்கேற்ப  மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் கருத்து. இந்த மாதத்தில் நமது முன்னோர்கள் , கடவுள்களின் ஆசியை முழுமையாக பெற நாளும் பிரார்த்தனை செய்வோம். வளமான வாழ்வை  பெறுவோம். 

கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. அதனை  இந்த புரட்டாசி மாதத்தில் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இதனால்  நமக்கு பல கோடி புண்ணியம் தேடி வரும். வீடுகளில் விளக்கு ஏற்றும் போது இந்த நாமத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஹரி ஹரி என்ற நாமத்தை உச்சரிக்கலாம். தீபம் ஏற்றும் போது மட்டுமல்ல இந்த மாதம் முழுவதும் பெருமாளின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தால். கோடான கோடி புண்ணியத்தை பெற முடியும்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!