இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு!

 
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு!


இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் கேரளாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40000ஐ தாண்டியுள்ளது. கேரளாவில் மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் முழுஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மலையாள மாதமான வைகாசி மாத தொடக்கத்தை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
இந்த ஐந்து நாட்களில் மாதாந்திர பூஜைகள் மற்றும் சடங்குகள் வழக்கப்படி செய்யப்பட்டாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

From around the web