மரியாதைய காப்பாத்திக்கோங்க!! ரஜினிக்கு நோ சொன்ன தனுஷ்! கதறும் கோடம்பாக்கம்!

மரியாதைய காப்பாத்திக்கோங்க!! ரஜினிக்கு மறுப்பு தெரிவித்த  தனுஷ்.!
 
ரஜினி தனுஷ்

தமிழ் திரை நட்சத்திரங்களில் நடிகர் தனுஷூக்கு இப்போது படங்களின் வியாபாரம் நல்ல லெவலில் இருக்கிறது. முன்னணி நடிகர் என்கிற அளவில் தான் தனுஷ் இருக்கிறார் ஆனால், இவர் 2004ல் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை  காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது இந்த அளவுக்கு வளர்ச்சியும், பக்குவமும், வசதியும் கிடையாது. இருந்தாலும் பெரிய மனதுடன், தனது மகளின் காதலுக்கு மரியாதை செய்தார் ரஜினி. 

கடந்த இரண்டு, மூன்று தினங்களாக இதைத் தான் சொல்லி சொல்லி மாய்ந்து போகிறது கோடம்பாக்கம். இத்தனைக்கும் தனுஷ் -ஐஸ்வர்யா திருமணம் முடிந்து 18 வருஷங்கள் உருண்டோடி விட்டது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். 

தனுஷ் ஐஸ்வர்யா

இருவரும் ஜனவரி 17ல் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு  தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து தனுசின் தந்தை கஸ்தூரிராஜா, எல்லா குடும்பங்களிலும் வரும் குடும்ப சண்டை தான் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஏற்பட்டிருப்பது. இருவரும் இன்னும் முறையாக விவாகரத்து செய்யவில்லை. கருத்து வேறுபாடு  காரணமாக பிரிந்துள்ளனர். இது தற்காலிகமான முடிவு தான் எனத் தெரிவித்துள்ளார். 

நாலு சுவற்றுக்குள் இருக்கும் போது, எல்லோரும் சேர்த்து வைக்கவே ப்ரியபடுவார்கள். ஆனால், குடும்ப சண்டை வீதிக்கு வந்து ரொம்ப வருஷமாச்சு என்கிறார்கள் சினிமா பிரபலங்கள். ‘வொய் திஸ் கொலவெறி’ என்று தனுஷ் பாடத் தொடங்கிய போதே இருவருக்குள்ளும் இருந்து வந்ததாக நம்ப பட்ட காதல் கெமிஸ்ட்ரி, கோலிவுட் நடிகைகளிடம் தனுஷுக்கு ஏற்பட துவங்கியது தான் இவர்களின் இல்வாழ்க்கையில் விழுந்த முதல் விரிசல் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தனுஷ் குடும்பம்
ஐஸ்வர்யா இயக்கிய அந்த படத்தின் பப்ளிசிட்டி விழாக்களிலும், பேட்டிகளிலும் ஓர் இயக்குநராக தனுஷ், தன் மனைவிக்கு மரியாதை தரவேயில்லை என்று கோடிட்டு காட்டுகிறார்கள். பேட்டி கொடுக்க சென்ற எப்.எம். நிலையங்களில் ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே தனுஷும், ஸ்ருதிஹாசனும் தனியே காரில் கிளம்பிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. அதன் பிறகு கோலிவுட்டில் காதலித்து கரம் பிடித்த நடிகைகள், தங்களது கணவரை  விவாகரத்து செய்யும் போதெல்லாம் தவறாமல் தனுஷ்  பெயர் உச்சரிக்கப்பட்டது. இவையெல்லாம் அப்போது கிசுகிசுக்களாக கடந்து செல்லப்பட்டாலும், நமுட்டு சிரிப்பு சிரித்தவர்கள் ஏராளம்.

இந்த செய்திகளின் பின்னணி குறித்து தெரிந்த சூப்பர் ஸ்டார், தனுஷை அழைத்து அட்வைஸ் செய்த பின், பிரச்சனை கொஞ்சம் நாளைக்கு சரியானது. ஐஸ்வர்யாவிடமும் ரஜினி இது குறித்து பேசி, குழந்தைகளின் எதிர்காலத்தையும் மனசுல ரெண்டு பேரும் வெச்சுக்கோங்க என்ற சொன்னதால், இத்தனை வருடங்களாக ஐஸ்வர்யா மெளனமாக சகித்து கொண்டிருந்தார் என்றே சொல்கிறார்கள். இப்போது காதல் கத்திரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வந்து கல்யாணத்தில் முடிந்தது போலவே, இருவரும் விவாகரத்துக்கு நிற்கிறார்கள்.  இந்நிலையில் நடிகர் ரஜினி மீண்டும் இருவரையும் அழைத்து சமாதானம் பேச நினைத்து தனுசுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், நடிகர் தனுஷ், “உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள். வீணா உங்க மரியாதைய நீங்களாவே கெடுத்துக்காதீங்க” என  முகத்திலறைந்தாற் போல் சொல்லி இணைப்பைத் துண்டித்ததாக குமுறுகிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள். 

சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களுக்கும் போடுகின்ற சண்டை, சச்சரவு மீம்ஸ்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த சர்ச்சைகளுக்கும், மன நிம்மதியை பறிக்கிற விஷயங்களுக்கும் பயந்து தான் ரஜினி, இத்தனை நாட்களாக அரசியலுக்கு வராமல் இருந்தார். இதனால் நிஜமாகவே பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தனக்கும், குடும்பத்துக்கும் நேர்மையாய் இருந்து வரும் ஒரு பெரிய மனுஷனும், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் எதிர்காலத்தை குறித்த கேள்விகள் துரத்த பு ரிந்தும் புரியாமலும் இருக்கும் அவரது இரு பேரன்களும் தான்!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க... 

வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யாதீங்க! அப்புறம் செல்வம் உங்களிடம் தங்காது!

வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க இதனை மட்டும் செய்து பாருங்க!! 

திருமண வரவேற்பில் மணமகள் கலக்கல் டான்ஸ்! மணமகன் அடித்ததால் மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண்!!