தமிழகத்தில் 4 புதிய நீட் தேர்வு மையங்கள் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

 
தமிழகத்தில் 4 புதிய நீட் தேர்வு மையங்கள் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 4 புதிய நீட் தேர்வு மையங்கள் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இதற்காக முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து, “முதல்வரின் வழிகாட்டுதலின் படி, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியதாக” தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னை சந்தித்து நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அவரிடம் விளக்கினேன். நீட் தேர்வில், பிராந்திய மொழிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்தும் மலையாளம், பஞ்சாபி மொழிகளை சேர்த்தது குறித்தும் விளக்கினேன். ஏற்கனவே தமிழில் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழக மாணவர்களின் நலனுக்காக, செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் கூடுதலாக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 14 இல் இருந்து 18 ஆக அதிகரித்து உள்ளது எனவும் மா.சுப்ரமணியத்திடம் விளக்கினேன்.” என்று பதிவிட்டு உள்ளார்.

From around the web